Showing posts with label போராட்டம். Show all posts
Showing posts with label போராட்டம். Show all posts

Friday, January 23, 2009

சட்டக் கல்லூரி சாகும் வரை பட்டினிப் போராட்டம்

ஈழ மக்களின் துயரை நீக்கக் கோரி செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் 14 பேர் நேற்று முதல் சாகும் வரை பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர். செங்கல்பட்டு சட்டக் கல்லூரி வாசலில் நடக்கும் இந்த போராட்டம் இன்று இரண்டாவது நாளாகத் தொடர்கிறது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் :

1. கெம்ப குமார் - தொடர்பு எண் : 92455-81684
2. திருமுருன்
3. விஜயகுமார்
4. மணிவேல்
5. பிரவீன்
6. சுரேஷ்
7. ராஜா
8. ராஜ்குமார்
9. முஜிபுர் ரகுமான்
10. முனிஷ் குமார்
11. நவீன்
12. பிரியன்
13. பிரபு
14. ஆறுமுக நயினார்

திரு. கெம்ப குமாரிடம் பேசிய போது, 'ஈழத்தில் துன்புறும் தமிழ் மக்களுக்கு இந்திய அரசும் தமிழக அரசும் உடனடியாக உதவ வேண்டும். இந்திய அரசு சிங்கள அரசுக்கு செய்யும் உதவிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. எத்தனை நாட்களானாலும் எங்கள் போராட்டத்தை நாங்கள் உறுதியாகத் தொடருவோம். எங்களை கைது செய்தாலும் சிறையிலும் எங்கள் உண்ணாவிரதம் தொடரும்' என்று உறுதியோடு கூறினார்.

Update 1:

நேற்று (23 ஜனவரி 2009) மாலை முதல் மேலும் 3 மாணவர்கள் போராட்டத்தில் இணைந்துள்ளனர். அவர்கள் பெயர் வருமாறு :
15. அன்பரசு தொடர்பு எண் : 98940-45451
16. சரவணன்
17. கே. சி. ராஜா

Update 2:-
நான்கு நாட்களாக பட்டினி போராட்டத்தில் இருக்கும் 17 மாணவர்களில் 5 பேர் இன்று(24 ஜனவரி 2009) இரவு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்

Thursday, January 22, 2009





விழுப்புரத்தில் இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலையை கண்டித்து, மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவ,மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்

இலங்கையில் நாள்தோறும் அப்பாவிதமிழர்கள்மீது சிங்கள அரசு குண்டுமழை பொழிந்து கொன்று குவித்துவருகிறது தமிழக சட்டமன்றத்திலே அனைத்துகட்சிகளும் போரை நிறுத்தவலியுறுத்தி தீர்மானம் போட்டும் தமிழகத்திலே அனத்துகட்சிகளும் மனித சங்கிலி,உண்ணாவிரதம் ,கண்டனஆர்ப்பாட்டங்கள் ந்டத்தியும் திருமாவளவன்போன்றோர் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தும் இந்திய அரசின் பதில் திருப்தி அளிககாதநிலையில் மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் வகுப்புகளை புறக்கணிப்பது என்று முடிவுசெய்து இன்று விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவ,மாணவிகள் சுமார் 2000ம் பேர் வகுப்புகளை புறக்கணித்தனர் மேலும் திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரி மாணவ,மாணவிகள்,சுமார் 700க்கும் மேற்பட்டவர்களும் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ,மாணவியர்கள் சுமார் 600க்கும் மேற்ப்பட்டவர்கள் தங்களுடைய வகுப்புகளை இன்று புறக்கணித்தனர் நாளையும் இந்தபோராட்டம் தொடரும் என்று மாணவர்கள் தெரிவித்தனர்


விழுப்புரம் ஜோதிநரசிம்மன்



விருதாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் இலங்கையிலே அப்பாவிதமிழர்கள் மீதான போரை நிறுத்த வலியுருத்தி வகுப்புகளை புறக்கணித்து பேரணி நடத்தினர்

Wednesday, January 21, 2009

த‌மிழக‌ம் முழுவது‌ம் மாணவ‌ர்க‌ள் வகு‌ப்பு புற‌க்க‌ணி‌ப்பு

சிங்கள அரசின் தமிழினப் படுகொலைக்கு துணைப் போகும் இந்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம்

அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பின் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் மாணவர்களின் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்றது. சிங்கள அரசின் தமிழினப் படுகொலைக்குத் துணைப் போகும் இந்திய அரசைக் கண்டித்தும் தமிழினப் படுகொலையை உடனடியாக நிறுத்தக் கோரியும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பல கல்லூரிகளிலும் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு முழக்கங்கள் எழுப்பினர்.

செ‌ன்னை‌யி‌ல் லயோலா கல்லூரி, மா‌நில‌க் க‌ல்லூ‌ரி, ப‌ச்சைய‌ப்ப‌ன் க‌ல்லூ‌ரி, ந‌ந்தன‌ம் கலை‌ க‌ல்லூ‌ரி உ‌ள்பட ப‌ல்வேறு க‌ல்லூ‌ரிகளை சே‌ர்‌ந்த மாணவ‌ர்க‌ள் இ‌ன்று வகு‌ப்புகளை புற‌க்க‌ணி‌த்து ‌வி‌ட்டு அம‌ை‌தியான முறை‌யி‌ல் ம‌த்‌திய அரசு‌க்கு த‌ங்களது எ‌தி‌ர்‌ப்பை கா‌‌ட்டின‌ர்.

திருச்சியில் மாணவர் தலைவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களும் கலைக் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலத்தில் சிங்கள அரசின் கொடி எரிக்கப்பட்டது. கோவை, திருப்பூர், ஈரோடு, உடுமலை, ஊட்டி உள்ளிட்ட பலப் பகுதிகளில் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டையில் மாணவர்கள் பேரணியாகச் சென்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தனர்.

கும்பகோணம், தஞ்சை, மன்னார்குடி, சிவகங்கை, திருவாரூர், மதுரை, தூ‌த்து‌‌க்குடி, ‌திருநெ‌ல்வே‌லி, ‌விழு‌ப்புர‌ம், கடலூ‌ர், த‌ர்மபு‌ரி, ‌கிரு‌‌ஷ்ண‌கி‌ரி, புதுவை உட்பட பலப் பகுதிகளில் மாணவர்களை வகுப்புகளைப் புறக்கணித்து பல்வேறு வடிவங்களில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

முன்னதாக, மாணவர்களின் இப்போராட்டத்திற்கு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, பெரியார் திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு, உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் மாணவர் அமைப்புகளும் தங்களின் ஆதரவைத் தெரிவித்திருந்தன. அந்த அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்களும் பெருந்திரளாக இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

நாளையும் நாளை மறுநாள் வெள்ளியன்றும் மாணவர் போராட்டம் தொடருமென எதிர்ப்பார்க்கப் படுகிறது.


























கோவையில் மாணவர்கள் நடத்தியப் போராட்டதின் படங்கள்

Monday, January 19, 2009

ஈழத் தமிழரைப் பாதுகாக்க தமிழகம் முழுவதும் வகுப்பு புறக்கணிப்புப் போராட்டம்

அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பு பத்திரிகைச் செய்திஈழத் தமிழரைப் பாதுகாக்க தமிழகம் முழுவதும் வகுப்பு புறக்கணிப்புப் போராட்டம்.

தமிழகமெங்கும் உள்ள அனைத்துக் கல்லூரிகளின் மாணவர்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பு ஒன்றினை உருவாக்குவதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர் பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர். அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள் வருமாறு :

  1. தமிழகமெங்கும் உள்ள அனைத்துக் கல்லூரி மாணவர்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. இதன் ஒருங்கிணைப்பாளராக சென்னைப் பல்கலைக் கழகத்தின் மாணவர் கே. வெங்கடாசலம் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
  2. சிங்கள அரசின் தமிழினப் படுகொலைக்கு துணைப் போகும் இந்திய அரசைக் கண்டித்து கூட்டமைப்பின் சார்பில் வரும் ஜனவரி 21 முதல் தமிழகமெங்கும் வகுப்பு புறக்கணிப்புப் போராட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. சாவின் விளிம்பில் நிற்கும் ஈழத் தமிழ் மக்களைக் காக்க நடக்கும் இப்போராட்டத்திற்கு அனைத்து பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களும், மற்றும் பேராசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். மேலும் அனைத்து ஜனநாயக மாணவர் அமைப்புகளும் இந்தப் போராட்டத்திற்கு தங்கள் பேராதரவினைத் தரவேண்டும் என்றும் வேண்டிக் கொள்கிறோம்.

(ஒருங்கிணைப்பாளர்)
கே. வெங்கடாசலம் - 94443-18945

மேலும் தொடர்புக்கு :
பா. பாக்கியராஜ் (திருச்சி) - 98658-62861
செந்தில் (சென்னை) - 94445-04767
இனியன் (சென்னை) - 98845-27997
பன்னீர்செல்வம் (கோவை) - 98944-53095

Thursday, January 8, 2009

மன்மோகன் சிங்கிற்கு கருப்புக் கொடி 2000-க்கும் மேற்பட்டவர்கள் கைது

சென்னை சன 8: சிங்களப் பேரினவாத அரசுக்கு துணையாக ஆயுதங்களையும் ஆலோசனைகளையும் வழங்கி தமிழர்களின் இனப் படுகொலைக்கு ஆதரவாக இருக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எதிராக கருப்புக் கொடி காட்ட
முயன்ற இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழின உணர்வாளர்கள் இன்று சென்னையில் கைது செய்யப்பட்டனர்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டிற்காக சென்னை வந்திருந்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அந்த வழியாக பயணிப்பதை ஒட்டி அவருக்கு அங்கு கருப்புக் கொடி காட்டி தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் நோக்கோடு இன்று காலை 8 மணிக்கு சென்னை, சைதாப்பேட்டை அருகே பெண்கள், குழந்தைகள் உட்பட பெருந்திரளான தமிழின உணர்வாளர்கள் கூடினர்.

மன்மோகன் சிங்கே திரும்பிப் போ!
இந்திய அரசே இலங்கைக்கு ஆயுத் தராதே!
சிங்களன் உனக்கு பங்காளியா தமிழன் உனக்கு பகையாளியா!
காங்கிரஸ் கைக்கூலி கருணாநிதியே ஒழிக!
தமழின விரோத காங்கிரசை தமிழ்நாட்டை விட்டு விரட்டுவோம்!
விடுதலைப் புலிகளை ஆதரிப்போம்! பிரபாகரனை அதரிப்போம்!
தமிழீழத்தை அங்கீகரி!

என பல்வேறு முழக்கங்களை எழுச்சியுடன் எழுப்பினர்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், புதுவை,மதுரை, கோவை, சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சை, நெல்லை உட்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தமிழின உணர்வாளர்கள் கொந்தளிப்போடு திரண்டிருந்தனர்.

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், பெரியார் திராவிடர் கழகத்தின் ஆனூர் ஜெகதீசன், கோவை இராமகிருட்டிணன், விடுதலை இராசேந்திரன், தமிழ்த் தேச விடுதலைக் கட்சியின் தியாகு, அகில இந்திய சமதாக் கட்சி துணைத் தலைவர் குமரி நம்பி, பார்வர்டு பிளாக்கின் ஆனந்த முருகன், தமிழ்த் தேசப் மார்க்சியக் கட்சியின் இராசேந்திர சோழன், தமிழர் தன்னுரிமை இயக்கத்தின் பாவலர் இராமச்சந்திரன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் வைகறை, உழைக்கும் மக்கள் விடுதலை இயக்கத்தின் மெல்கியோர், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் கவிஞர் தமிழேந்தி, வாலாஜா வல்லவன், தலைநகர் தமிழ்ச்சங்கத்தின் உஞ்ஞை அரசன் மற்றும் தேனிசைச் செல்லப்பா, சந்திரேசன், பொன்னிறைவன், அற்புதம் அம்மாள் உட்பட பல்வேறு தமிழ் அமைப்புகளின் தலைவர்களும் தோழர்களும் கலந்து கொண்டனர்.

மன்மோகன் சிங் அவ்விடத்தை கடக்கும் நேரம் நெருங்கியவுடன் காவல்துறையினர் கூடியிருந்த அனைவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மொத்தம் 22 பேருந்துகளில் ஏற்றப்பட்டு அருகில் உள்ள 8 திருமண மண்டபங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

Saturday, November 15, 2008

இது மென்பொருள் பொறியாளர்களின் தருணம்!

Thursday, April 3, 2008

பேரணிக்கு "மழையின் காரணமாகத் தடை!"

பேரணிக்கு "மழையின் காரணமாகத் தடை!" கலைஞரின் அரசு கண்டுபிடித்த புதிய காரணம்!

22-03-08 அன்று மாலை 4 மணிக்கு சென்னை தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் இந்திய அரசுக்கு எதிராக நடத்த இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. அரசு தடைவிதித்தது அனைவரும் அறிந்ததாகும்.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள்-மாநாடுகளுக்கு தி.மு.க. அரசு தடைவிதிக்கும் போது எல்லாம் சொல்லாத புதிய காரணத்தை இப்போது கண்டுபிடித்துச் சொல்லியுள்ளது. காவல்துறை ஆணையாளர் அளித்துள்ள தடை ஆணையில் பின்வருமாறு குறிக்கப்பட்டுள்ளது.

"கடந்த இரு நாட்களாக தொடர்ந்து அதிக அளவு மழை பெய்து வருவதாலும் மேலும் வலுவான மழைபெய்ய சாத்தியக்கூறுகள் உள்ளதாலும் நகரின் சில பகுதிகளில் தண்ணீர் தேங்கி அதனால் ஏற்பட்டுள்ள போக்குவரத்துப் பிரச்னையும் மற்றும் அதன் தொடர்பால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்னையை சமாளிக்க வேண்டியதாலும், மேலும் மனுதாரர் கோரியுள்ள இடம் அனுமதிக்கப்பட்ட இடமாக இருப்பினும் மேற்படி மழையின் காரணமா ஏற்பட்ட பிரச்சினையில் 22-03-08 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்க இயலாத சூழ்நிலை உள்ளது மேலும் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத் சமூக விரோதிகள் சிலர் ஆர்ப்பாட்டத்தின் போது மறைமுகமாக ஊடுருவி சட்டம் ஒழுங்குப் பிரச்னையை ஏற்படுத்தி அதன் மூலம் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் ஈடுபட உள்ளதாக நம்பத்தகுந்த தகவல் உள்ளது எனவே மேற்கூறிய காரணங்களால் மனுதாரர் 22-03-08 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரியுள்ள மனுவானது நிராகரிக்கப்படுகிறது."

மழையை காரணமாக காட்டி ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு தடைவிதிக்கப்படுவது உலகிலேயே இதுதான் முதன்முறையாகும். மழைபெய்தால் ஆர்ப்பாட்டம் நடத்துவோர் தாமாகவே முன்வந்து அதை ஒத்திவைப்பதுதான் வழக்கம். ஆனால் கருணையே வடிவமான கலைஞரின் அரசு தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் மழையில் நனைந்துவிடக்கூடது என அதிகமான அக்கரையை எடுத்துக்கொண்டு அவர்களின் நலன்காக்க தடைவிதித்துள்ளது.

மழைக் காலத்தில் மழை காரணமா தடை, இனி வெயில் காலத்தில் வெயிலின் காரணமாகத் தடை, பனிக்காலத்தில் பனிகாரமாகத் தடை, இனி வெயிலோ, மழையோ, பனியோ இல்லாத காலத்தில்தான் நாம் நிகழ்ச்சிகள் நடத்தவேண்டியிருக்கும். அரசியல் கட்சிகள் கூட்டங்கள், நிகழ்ச்சிகள் நடத்தும்போது அதற்குரிய பாதுகாப்பு கொடுப்பது காவல்துறையினரின் நீங்காத கடமையாகும். ஆனால் சென்னை மாநகர காவல்துறையோ சமூக விரோதிகளின் ஊடுருவலை தன்னால் தடுக்க முடியாது என்பதை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டு அதன் காரணமாக ஆர்ப்பாட்டத்திற்கு தடைவிதித்துள்ளது.

நல்ல அரசு! நல்ல காவல் துறை!!