சிங்கள அரசின் தமிழினப் படுகொலைக்கு துணைப் போகும் இந்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம்
அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பின் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் மாணவர்களின் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்றது. சிங்கள அரசின் தமிழினப் படுகொலைக்குத் துணைப் போகும் இந்திய அரசைக் கண்டித்தும் தமிழினப் படுகொலையை உடனடியாக நிறுத்தக் கோரியும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பல கல்லூரிகளிலும் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு முழக்கங்கள் எழுப்பினர்.
சென்னையில் லயோலா கல்லூரி, மாநிலக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, நந்தனம் கலை கல்லூரி உள்பட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து விட்டு அமைதியான முறையில் மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பை காட்டினர்.
திருச்சியில் மாணவர் தலைவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களும் கலைக் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலத்தில் சிங்கள அரசின் கொடி எரிக்கப்பட்டது. கோவை, திருப்பூர், ஈரோடு, உடுமலை, ஊட்டி உள்ளிட்ட பலப் பகுதிகளில் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டையில் மாணவர்கள் பேரணியாகச் சென்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தனர்.
கும்பகோணம், தஞ்சை, மன்னார்குடி, சிவகங்கை, திருவாரூர், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, விழுப்புரம், கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, புதுவை உட்பட பலப் பகுதிகளில் மாணவர்களை வகுப்புகளைப் புறக்கணித்து பல்வேறு வடிவங்களில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
முன்னதாக, மாணவர்களின் இப்போராட்டத்திற்கு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, பெரியார் திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு, உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் மாணவர் அமைப்புகளும் தங்களின் ஆதரவைத் தெரிவித்திருந்தன. அந்த அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்களும் பெருந்திரளாக இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
நாளையும் நாளை மறுநாள் வெள்ளியன்றும் மாணவர் போராட்டம் தொடருமென எதிர்ப்பார்க்கப் படுகிறது.
கோவையில் மாணவர்கள் நடத்தியப் போராட்டதின் படங்கள்
Wednesday, January 21, 2009
தமிழகம் முழுவதும் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment