சிங்கள அரசின் தமிழினப் படுகொலைக்கு துணைப் போகும் இந்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம்
அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பின் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் மாணவர்களின் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்றது. சிங்கள அரசின் தமிழினப் படுகொலைக்குத் துணைப் போகும் இந்திய அரசைக் கண்டித்தும் தமிழினப் படுகொலையை உடனடியாக நிறுத்தக் கோரியும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பல கல்லூரிகளிலும் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு முழக்கங்கள் எழுப்பினர்.
சென்னையில் லயோலா கல்லூரி, மாநிலக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, நந்தனம் கலை கல்லூரி உள்பட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து விட்டு அமைதியான முறையில் மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பை காட்டினர்.
திருச்சியில் மாணவர் தலைவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களும் கலைக் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலத்தில் சிங்கள அரசின் கொடி எரிக்கப்பட்டது. கோவை, திருப்பூர், ஈரோடு, உடுமலை, ஊட்டி உள்ளிட்ட பலப் பகுதிகளில் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டையில் மாணவர்கள் பேரணியாகச் சென்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தனர்.
கும்பகோணம், தஞ்சை, மன்னார்குடி, சிவகங்கை, திருவாரூர், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, விழுப்புரம், கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, புதுவை உட்பட பலப் பகுதிகளில் மாணவர்களை வகுப்புகளைப் புறக்கணித்து பல்வேறு வடிவங்களில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
முன்னதாக, மாணவர்களின் இப்போராட்டத்திற்கு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, பெரியார் திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு, உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் மாணவர் அமைப்புகளும் தங்களின் ஆதரவைத் தெரிவித்திருந்தன. அந்த அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்களும் பெருந்திரளாக இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
நாளையும் நாளை மறுநாள் வெள்ளியன்றும் மாணவர் போராட்டம் தொடருமென எதிர்ப்பார்க்கப் படுகிறது.
கோவையில் மாணவர்கள் நடத்தியப் போராட்டதின் படங்கள்
Wednesday, January 21, 2009
தமிழகம் முழுவதும் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
Monday, January 19, 2009
ஈழத் தமிழரைப் பாதுகாக்க தமிழகம் முழுவதும் வகுப்பு புறக்கணிப்புப் போராட்டம்
தமிழகமெங்கும் உள்ள அனைத்துக் கல்லூரிகளின் மாணவர்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பு ஒன்றினை உருவாக்குவதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர் பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர். அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள் வருமாறு :
- தமிழகமெங்கும் உள்ள அனைத்துக் கல்லூரி மாணவர்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. இதன் ஒருங்கிணைப்பாளராக சென்னைப் பல்கலைக் கழகத்தின் மாணவர் கே. வெங்கடாசலம் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
- சிங்கள அரசின் தமிழினப் படுகொலைக்கு துணைப் போகும் இந்திய அரசைக் கண்டித்து கூட்டமைப்பின் சார்பில் வரும் ஜனவரி 21 முதல் தமிழகமெங்கும் வகுப்பு புறக்கணிப்புப் போராட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. சாவின் விளிம்பில் நிற்கும் ஈழத் தமிழ் மக்களைக் காக்க நடக்கும் இப்போராட்டத்திற்கு அனைத்து பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களும், மற்றும் பேராசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். மேலும் அனைத்து ஜனநாயக மாணவர் அமைப்புகளும் இந்தப் போராட்டத்திற்கு தங்கள் பேராதரவினைத் தரவேண்டும் என்றும் வேண்டிக் கொள்கிறோம்.
(ஒருங்கிணைப்பாளர்)
கே. வெங்கடாசலம் - 94443-18945
மேலும் தொடர்புக்கு :
பா. பாக்கியராஜ் (திருச்சி) - 98658-62861
செந்தில் (சென்னை) - 94445-04767
இனியன் (சென்னை) - 98845-27997
பன்னீர்செல்வம் (கோவை) - 98944-53095
Thursday, January 8, 2009
மன்மோகன் சிங்கிற்கு கருப்புக் கொடி 2000-க்கும் மேற்பட்டவர்கள் கைது
முயன்ற இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழின உணர்வாளர்கள் இன்று சென்னையில் கைது செய்யப்பட்டனர்.
தமிழீழத்தை அங்கீகரி!
மன்மோகன் சிங் அவ்விடத்தை கடக்கும் நேரம் நெருங்கியவுடன் காவல்துறையினர் கூடியிருந்த அனைவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மொத்தம் 22 பேருந்துகளில் ஏற்றப்பட்டு அருகில் உள்ள 8 திருமண மண்டபங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.
Friday, January 2, 2009
தமிழர்களை மதியாத மன்மோகன் சிங்கிற்கு எதிராகக் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்
தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :
இலங்கையில் தொடர்ந்து தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் கட்சி வேறுபாடின்றி எழுப்பிய குரலுக்கு இந்திய அரசு செவி சாய்க்கவில்லை.
இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டுமென்றும் இந்திய அரசு இலங்கை அரசுக்கு ஆயுத உதவி வழங்கக் கூடாது என்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரும் இணைந்து விடுத்த வேண்டுகோளையும் இந்திய அரசு பொருட்படுத்தவில்லை.
இந்த நிலைமையில் ஜனவரி 7-ஆம் தேதி சென்னைக்கு வர இருக்கும் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு தமிழர்களின் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவதென தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்துள்ளது. தமிழர்களின் தன்மானம் காக்கும் இப்போராட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் தமிழ் அமைப்புகளும் தமிழ் உணர்வாளர்களும் திரளாகக் கலந்துக் கொள்ளும்படி வேண்டிக் கொள்கிறேன்.
பழ. நெடுமாறன்
Thursday, January 1, 2009
திசை திருப்புபவர்களின் வலையில் விழாதீர் - பழ. நெடுமாறன் வேண்டுகோள்
இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும், இலங்கை அரசுக்கு இந்திய அரசு இராணுவ ரீதியான உதவிகள் அளிக்கக் கூடாது ஆகிய இரு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழகத்தில் ஒன்றுபட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போராட்டங்களைச் சீர்குலைக்கும் வகையிலும் பிரச்னையைத் திசை திருப்பவும் தமிழகக் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த சிலர் செயல்பட்டு வருகின்றனர். தமிழகமே ஒன்றுபட்டு நிற்கும்போது இவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு சிங்கள அரசுக்கு ஆதரவான போக்கில் நடந்து கொள்வதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ஈழத் தமிழர்களின் துயரைத் துடைப்பதற்காக மக்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டிருக்கக் கூடிய பல தலைவர்களைக் கைது செய்ய வேண்டுமென இவர்கள் கூக்குரல் இடுகின்றனர்.
இந்திய அரசியல் சட்டம் வழங்கியிருக்கும் பேச்சுரிமை, கருத்துரிமை ஆகியவற்றை பறிக்கும் வகையில் செயல்படும் இவர்களின் அநீதியான கோரிக்கைக்கு தமிழக அரசு பணிந்து பல தலைவர்களை கைது செய்து சிறையில் அடைத்திருப்பது அப்பட்டமான ஜனநாயக உரிமைகள் மீறலாகும்.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் திரண்டு வரும் உணர்வை மேலும் மேலும் பெருக்கி அதன் மூலம் இந்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் நிர்ப்பந்தங்களை உருவாக்கி சரியான வழியில் செயல்பட வைப்பதே நமது முக்கிய நோக்கம் என்பதை உணர்ந்து நாம் செயல்பட்டாக வேண்டும். பிரச்னையை திசை திருப்பி நமக்கு ஆத்திரமூட்டி குழப்புவதற்கு முயற்சி செய்பவர்களின் வலையில் நாம் விழுந்து விடக் கூடாது. தமிழர்களை ஒன்று திரட்டும் பணியில் முழு மூச்சுடன் செயல்படுமாறு அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன்.
Monday, December 8, 2008
தகவல் தொழில்நுட்பத் துறை இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் நடத்தும் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம்!
இலங்கையில் தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலைகளை நிறுத்தக் கோரி தகவல் தொழில்நுட்பத் துறை இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் நடத்தும் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம்!
- OMR சாலையில் டபுள் பெட்ரூம் பிளாட் வாங்குவது பற்றி திட்டமிடுகிறோம் நாம். மேலிருந்து விழும் குண்டுகளிலிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காக குடிசைகளிலிருந்து வெளியேறி காடுகளில் தஞ்சம் புகுகிறார்கள் அவர்கள்.
- இரவு கொசுக்கடியிலிருந்து தப்பிக்க என்ன வழி என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம் நாம். பகலில் கடிக்க வரும் பாம்புகளிலிருந்து தப்பிக்கும் வழியறியாது அடர்ந்த வனங்களில் தினமும் இறக்கிறார்கள் அவர்கள்.
- அடுத்த வேளை உணவு, KFC Chicken-ஆ அல்லது Pizza Hut-ஆ என்று நண்பர்களுடன் பேசுகிறோம் நாம். நாளைக்காவது ஒரு வேளை உணவு கிடைக்குமா என்று சொந்த நாட்டில் அகதிகளாகத் தவிக்கிறார்கள் அவர்கள்.
- பொங்கலுக்கு ஊருக்குப் போக இரண்டு மாதங்களுக்கு முன்பே online reservation செய்கிறோம் நாம். எப்போது தாய்நாடு போவோம் என்பது குறித்து யாதொரு நம்பிக்கையுமின்றி அகதிகளாக உலகெங்கும் சிதறிக் கிடக்கிறார்கள் அவர்கள்.
- சத்யம் சினிமா, MGM ரிசார்ட், சனிக்கிழமை இரவுக் கொண்டாட்டங்கள் என சுகமாய் வாழ்கிறோம் நாம். ஒவ்வொரு நொடியைக் கழிப்பதும் போராட்டமாய் வாழ்கிறார்கள் அவர்கள்.
- நாமும் தமிழர்கள், அவர்களும் தமிழர்கள் எனில், அவர்களுக்காக என்ன செய்யப் போகிறோம் நாம்?
நேரம்: காலை 09:00 - மாலை 06:00
இடம்: Auto garage (பழ.நெடுமாறன் உண்ணாவிரதம் இருந்த இடம்),
Near first signal on the way Koyembedu bus stand to anna nagar, Koyembedu
தகவல் தொழில்நுட்பத் துறை இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள்.
Sunday, December 7, 2008
எங்களுக்காக வாழ்க! - பேரா. அறிவரசன்
உலகம் முழுவதும் வாழ்கின்ற
ஒன்பது கோடித் தமிழர்க்கு
நிலமொன் றில்லை; உரிமையுடன்
நிமிர்ந்து வாழவோர் நாடில்லை
பலரும் தமிழரை அடிமையராய்ப்
பார்க்கும் அவலம் தீர்ப்பதற்கு
வலுவுடன் எழுந்து போர் உடற்றும்
மாண்புசேர் தலைவ! வாழியவே!
ஆற்றல் மறவ! அருந்தலைவ!
அன்னைத் தமிழை அரவணைத்துப்
போற்றிக் காத்து வளர்க்கின்ற
புகழ்ப் பிர பாகரப் பெரியோய்! உன்
ஏற்றம் அறிவோம்; பகையிருளை
எற்றித் தள்ளித் தமிழ்ஈழ
நாட்டைத் தருவாய் விராவாக
நல்வோய்! பல்லாண்டு வாழியவே!
வீரம் விளையும் ஈழத்தில்
வேற்றுச் சிங்களர் தமையகற்றிச்
சீரும் சிறப்பும் தமிழர்க்குச்
சேர்த்திட விரும்பி ஆர்த்தெழுந்து
போரினை நடாத்தும் புலிப்படையின்
புகழ்மேம் பட்ட தமிழ்த்தலைவ!
பாரிய வளமுடன் நலம்பெற்றுப்
பல்லாண்டு வாழிய! வாழியவே!
வெல்லுந் திறத்தால் சிறந்தவனே!
வேலுப் பிள்ளை பார்வதித்தாய்
செல்வனாய்ப் பிறந்து தமிழீழத்
தேசியத் தலைவராய் உயர்ந்தவனே!
நல்ல தமிழினம் உரிமையுள
நாட்டை அமைத்திட உழைப்பவனே!
பல்வகைச் சிறப்பும் நீபெற்றுப்
பல்லாண்டு பல்லாண்டு வாழியவே!
கார்த்திகைத் திங்களில் நீ பிறந்தாய்
காரிருள் நீக்கிட நீ வளர்ந்தாய்
போர்த்திறத் தால்தமிழ் இனம்காக்கும்
பொருவிலாத் தலைவனாய் வடிவெடுத்தாய்
தீத்தகைச் சிங்களர் தமைவென்று
செந்தமிழ் ஈழத்தை நீசமைப்பாய்
ஏத்துகி றோம்உனை எம்தலைவ!
இனும்நூ றாண்டுகள் வாழியவே!
தம்பியாய் இருந்தாய்; இன்றெமக்குத்
தலைவராய் உயர்ந்தாய்; உன்திறத்தால்
எந்தமிழ் ஈழ விடுதலையை
எமக்குநீ தருவாய் என்றுனையே
நம்பியே நிற்கிறோம்; ஐ. நா - வில்
நாளை தமிழ்க்கொடி நாட்டிடுவோம்
பைந்தமிழ்த் தலைவ! நனிசிறந்து
பல்லாண்டு பல்லாண்டு வாழியவே!
பிரபா கரனே! தமிழர்க்குப்
பெருமை சேர்க்க வந்தவனே!
அறிவால் உயர்ந்தோய்! பகையழிக்கும்
ஆற்றலில் சிறந்தோய்! விடுதலையே
குறியாய்க் கொண்டு களங்களிலே
கொற்றம் விளைக்கும் கொற்றவனே!
நிறைவாய் நலங்கள் பலபெற்று
நெடியபல் லாண்டுகள் வாழியவே!
ஞாலம் முழுதும் வாழ்கின்ற
நந்தமி ழர்க்கொரு நற்றுணையே!
ஆளும் உரிமை தமிழர்க்கே
ஆக்கிட உழக்கும் ஆற்றலனே!
சூழும் பகையிருள் தனைவிரட்டும்
சுடர்மிகு பிரபா கரனே! உன்
தோளின் வலிமையால் எமைக்காக்கத்
தூயவ! பல்லாண்டு வாழியவே!
ஐம்பத் தைந்தாம் அகவையிலே
அடிவைத் தெழுந்து நிற்கின்ற
எங்கள் தலைவ! இருபதுசேர்
இளைஞன் போல நெஞ்சுரத்தால்
பொங்கித் தளும்பும் உன்வீரம்
போற்றிப் பலநூ றாண்டுகள்நீ
எங்களுக் காக வாழ்கவென