தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை
வவுனியாவில் உள்ள சிங்கள இராணுவத் தலைமையகத்தின் மீது வான் புலிகளும் கரும்புலிகளும் நடத்திய தாக்குதல்களின் விளைவாக இந்தியா வழங்கியிருந்த ராடார் கருவி முற்றிலுமாக அழிக்கப்பட்டதுடன் அதை இயக்கிய இந்திய இராணுவ அதிகாரிகள் இருவர் காயமடைந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி இந்திய அரசின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்திவிட்டது.
சிங்கள அரசுக்கு ஆயுத உதவி மட்டுமல்ல ஆள் உதவியையும் இந்திய அரசு செய்து வருகிறது என்பது இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்திய அரசின் இந்தப் போக்கை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இலங்கை இனப் பிரச்னைக்கு இராணுவத் தீர்வு கூடாது, பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் பல முறை கூறிவிட்டார். ஆனால் நடைமுறையில் இராணுவ ரீதியான தீர்வு காண முயலும் சிங்கள அரசுக்கு இராணுவ ரீதியான உதவிகளை இந்திய அரசு செய்து வருவது தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களைக் கொதிப்படைய வைத்திருக்கிறது. இந்த தகாதப் போக்கினை உடனடியாக கைவிடுமாறு இந்திய அரசை வற்புறுத்துகிறேன்.
Tuesday, September 9, 2008
இந்திய அரசின் இரட்டை வேடம் அம்பலம்
Labels:
இந்திய அரசு,
தமிழீழம்,
பழ. நெடுமாறன்,
ராடார்,
வான் புலிகள்
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
புதுடில்லி அரசு ஒருபோதும் தமிழ்நாட்டுத் தமிழனை மனிதனாக மதித்ததில்லை. இது காலம் காலமான வரலாற்றை பார்த்தாலே தெரியும். சிங்களவன் தமிழ்நாட்டு தமிழன் மேல் தினமும் அடிச்சுக்கொண்டிருக்கிறான். அதை தட்டிக்கேட்கவே வக்கில்லை. கருணாநிதி காலம் காலமாக கடிதம் எழுதிக்கொண்டிருக்கட்டும். அந்தப்பக்கம் தமிழன் செத்துக்கொண்டிருக்கட்டும். தமிழர்கள் பொங்கியெழா விட்டால் கஸ்டம் தான். உலகில் எங்கும் தமிழனுக்கு தான் பிரச்சனை... தமிழர் அனைவரும் சேர்ந்து யோசிக்க வேண்டிய காலம்.
Post a Comment